உலகம்
பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது: கடும் நெருக்கடியில் ஜனாதிபதி மேக்ரான்!

பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்ந்தது: கடும் நெருக்கடியில் ஜனாதிபதி மேக்ரான்!
பிரான்ஸ் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் ஊடாக அந்நாடடு அரசாங்கம் கவிழ்ந்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக பிரதமர் மிச்செல் பார்னியர் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிரான்ஸ் ஆளும்கட்சி அதிகாரத்தை இழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார். பிரதமருக்கு எதிரான யோசனையை நிறைவேற்ற 288 வாக்குகள் தேவைப்பட்ட போதிலும் 331 வாக்குகள் அதற்கு எதிராக கிடைக்கப்பெற்றிருந்தன.
இதற்கமைய பெரும்பான்மை வாக்குகளால் யோசனை நிறைவேற்றப்பட்டது. 1962 ஆண்டுக்கு பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றின் ஊடாக பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் இடைக்கால பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.