Connect with us

இந்தியா

புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபீஞ்சல்… புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை

Published

on

central govt team to visit cyclone fengal puducherry affected areas Tamil News

Loading

புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபீஞ்சல்… புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை

புதுச்சேரியில் ஃபீஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன. இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  மத்திய குழு வருகை இந்நிலையில், புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகிற 8  ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஃபீஞ்சல் புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு மத்திய அரசை புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டது. அதன் பேரில் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதி என 2 நாட்கள் டெல்லியில் இருந்து புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழு புதுவை வருகிறது.இதையொட்டி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணி, வேளாண், உள்ளாட்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் சேத விவரங்களை சேகரித்து அறிக்கையாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து துறைகளிலும் சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி   “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன