Connect with us

பொழுதுபோக்கு

முத்துப்பாண்டி கேரக்டரில் புதுமுகம்: அண்ணா சீரியலில் முக்கிய மாற்றம்; காரணம் என்ன?

Published

on

Muthupandi IPS Anna Serial

Loading

முத்துப்பாண்டி கேரக்டரில் புதுமுகம்: அண்ணா சீரியலில் முக்கிய மாற்றம்; காரணம் என்ன?

ஜீ தமிழின் அண்ணா சீரியலில், சண்முகத்தின் தங்கை கேரக்டரில் நடித்து வந்த நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது போலீஸ் கேரக்டரான முத்துப்பாண்டி கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாற்றம் செய்ய்பபட்டுள்ளார்.முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் ஆகியோருடன் பூவிலங்கு மோகன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 4 தங்கைகளுக்கு அண்ணனாக மிர்ச்சி செந்தில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.இந்த சீரியலில், சண்முகத்தின் தங்கை வீரா கேரக்டரில் நடித்து வரும் நடிகைகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வில்லனாக இருந்து நல்லவனாக மாறிய முத்துப்பாண்டி கேரக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முத்துப்பாண்டி கேரக்டரில் ஏற்கனவே நடிகர் சத்யா நடித்து வந்தார். தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் பங்கேற்றுள்ளார்.இதன் காரணமாக அவர் போலீஸ் ட்ரெய்னிங்கிற்காக வெளியூர் சென்றுள்ளார் என்று கதையில் மாற்றம் செய்திருந்தனர். ஆனால் முத்துப்பாண்டி தற்போது ரீ-என்டரி கொடுத்துள்ள நிலையில், சத்யாவுக்கு பதிலாக, தற்போது புது நடிகர் அப்சல் ஹமீத் என்பவர் முத்துப்பாண்டி என்ற கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.என்.4 படத்தில் நாயகனாக நடித்திருந்த அப்சல் ஹமீத் இனி முத்துப்பாண்டி கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவர் தொடர்பான காட்சிகள் இன்று முதல் இவரது காட்சிகள் இடம்பெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. ரத்னாவை திருமணம் செய்ய நினைத்த முத்துப்பாண்டி தவறுதலாக இசக்கிக்கு தாலி கட்டியிருந்தாலும் தற்போது இருவருக்கும் இடையெ காதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன