இலங்கை
லெபனானில் நிர்க்கதியான இலங்கையர்கள்!

லெபனானில் நிர்க்கதியான இலங்கையர்கள்!
லெபனான் – இஸ்ரேல் யுத்தம் காரணமாக லெபனானில் நிர்க்கதியாகியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களில் சிறுவர்கள் ஐவர், பெண்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர். குறித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
லெபனானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். இதுவரை லெபனானிலிருந்து யுத்தம் காரணமாக நிர்க்கதியான 53 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.