இந்தியா
Adani Issue | அதானி குழும முறைகேடு புகார் விவகாரம் : நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி எம்பிகள்!

Adani Issue | அதானி குழும முறைகேடு புகார் விவகாரம் : நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி எம்பிகள்!
அதானி குழுமத்தின் சில பணியாளர்கள் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரே மாதிரியான உடை அணிந்து போராட்டத்தில் எம்பிகள் ஈடுபட்டனர்.
அந்த உடையில் அதானியும் மோடியும் ஒன்றுதான் என்றும், அதானி பாதுகாப்பாக இருப்பதாகவும் வாசகங்கள் இடம்பிடித்திருந்தன. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்றத்திலும் இதே விவகாரம் எதிரொலித்ததால் மக்களவை பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அதானி வழக்கு வெளிநாட்டு சதி என்று பாஜக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.