இந்தியா
Cuddalore Flood: “புயலால் வெள்ளத்தால் பாதித்த கடலூர்” – அன்புகரம் நீட்டிய ராமநாதபுரம் மக்கள்

Cuddalore Flood: “புயலால் வெள்ளத்தால் பாதித்த கடலூர்” – அன்புகரம் நீட்டிய ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண பொருள் அனுப்ப பட்டது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ‘ஃபெஞ்சி’ புயல் கரையை கடக்கும் போது வட தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு தேவையாக உதவிகளை செய்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 லட்சம் மதிப்பிலான அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள், கம்பளிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் லாரியின் மூலம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.