இந்தியா
Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவர்க்கு காத்திருந்த ஆச்சரியம்… இப்படி ஒரு அதிசியமா!

Ganga Water | கங்கை நீரை எடுத்து ஆய்வு நடத்தியவர்க்கு காத்திருந்த ஆச்சரியம்… இப்படி ஒரு அதிசியமா!
நம் கண்ணுக்கு எளிதில் தெரியாத நுண்ணுயிர்கள் ஏராளமானது இருக்கிறது. நாம் தினமும் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் இந்த நுண்ணுயிர் இருக்கும். சில நுண்ணுயிர்கள் நமக்கு நண்மையையும், பல நுண்ணுயிர்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நுண்ணுயிர்களை வெறும் கண்ணால் காணமுடியாது. இதற்காக நுண்ணுயிர் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு பொருளிலும், இருக்கும் நுண்ணுயிரிகளை எளிதில் காண முடியும். பொதுவாக ஆய்வகங்களில் மட்டும் இருக்கும் இந்த நுண்ணுயிர் நோக்கிகள் தற்போதைய நவீன காலத்தில் சிலர் வீடுகளிலேயே வைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி ஒருவர் வீட்டில் வைத்திருக்கும் நுண்ணுயிர் நோக்கியை உபயோகித்து ஒரு அதிசயத்தைக் கண்டறிந்துள்ளார். அவர் கண்டறிந்தது தற்போது பெரும் அளவில் வைரலாகி வருகிறது. பொதுவாக நுண்ணுயிர்கள் தோன்றுவது நீராகத்தான் இருக்கும். அதிலும், ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர்களில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும். அதன் அடிப்படையில் அந்த நபர் ஒரு குறிப்பிட்ட ஆற்றின் நீரை பரிசோதித்துள்ளார். ஆனால், அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது.
அவர் பரிசோதிக்க முடிவு செய்தது. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை ஆற்று நீரை. இதற்காக அவர் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார். அப்போது தான் அவர் அந்த நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாததைக் கண்டறிந்து ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆனாலும், இது எப்படி சாத்தியம் நிச்சயம் இருக்காது என எண்ணிய அந்த நபர், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை செய்தபோதும், கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்றே தெரியவந்துள்ளது. “சரி நான்கு நாட்கள் இந்த நீரை அப்படியே வைத்து பிறகு பரிசோதிப்போம்” என்று முடிவு செய்து, நான்கு நாட்கள் கழித்து நீரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை என்பது தெரியவந்தது. இந்த விஷயம் தெரியவந்ததும், அந்த நபர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
அவரை போலவே இந்த முடிவு வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது. காரணம், நீரில் நுண்ணுயிர் இல்லை என்றாலும், சில நாட்களில் அதில் நுண்ணுயிர் உருவாகும். ஆனால், கங்கை நீரில் அப்படி எந்த நுண்ணுயிரும் உருவாகவில்லை. அது அவ்வளவு சுத்தமான நீர் என கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வரப்படுகிறது.