Connect with us

சினிமா

Pushpa 2: வசூல் சாதனைக்கு மத்தியில் ஓர் சங்கடம்.. அல்லு அர்ஜுன் மீது அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்த வழக்கு!

Published

on

Pushpa 2: வசூல் சாதனைக்கு மத்தியில் ஓர் சங்கடம்.. அல்லு அர்ஜுன் மீது அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்த வழக்கு!

Loading

Pushpa 2: வசூல் சாதனைக்கு மத்தியில் ஓர் சங்கடம்.. அல்லு அர்ஜுன் மீது அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்த வழக்கு!

Advertisement

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த ‘புஷ்பா-2’ திரைப்படம், நேற்று முன் தினம் இரவு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அதன்படி, ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர்.

இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுவது மற்றும் திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அவரது பாதுகாப்பு குழுவினர், ஏற்கெனவே குழப்பமான சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் கூட்டத்தை பிடித்து தள்ளியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அல்லு அர்ஜுன் வருகையை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும் திரையரங்கு நிர்வாகம் போதிய பாதுகாப்பு வசதிகளை செய்யவில்லை என்றும், தங்களது தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்றும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் முதல் நாள் வசூல் இந்திய திரையுலகில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ள நிலையில், அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதியப்பட்ட நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன