இந்தியா
Temple Hundi Collection : “ராமநாதசுவாமி கோவிலில் எடுக்க எடுக்க குறையாமல் வந்த சிவன் சொத்து” –

Temple Hundi Collection : “ராமநாதசுவாமி கோவிலில் எடுக்க எடுக்க குறையாமல் வந்த சிவன் சொத்து” –
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஒன்றரை மாதம் கழித்து நிறைந்த உண்டியல் காணிக்கை இன்று எண்ணியதில், ஒன்றரை கோடிக்கு மேல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்ட ஆலயம். காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும் பணியானது மாதந்தோறும் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் எண்ணியதை தொடர்ந்து, தற்போது கோவில் உண்டியல் நிறைந்ததால் இன்று எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ராமநாதசுவாமி கோவிலின் உபகோவில்களில் இருந்து உண்டியல்கள் எடுத்து வரப்பட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒரு நாள் முழுவதும் உண்டியல் காணிக்கை எண்ணியதில், ஒரு கோடியே அறுபத்தி ஆறு லட்சத்து ஆறாயிரத்து எழுநூற்று எண்பத்து எட்டு ரூபாய் பணம், 105 கிராம் தங்கம், 4 கிலோ 665 கிராம் வெள்ளி, 184 வெளிநாட்டு பணங்கள் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.