உலகம்
சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்!

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயார்: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்!
சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
சிரியாவின் கிளர்ச்சிப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றி முன்னேறிவரும் சூழலில் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அரபி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தங்கள் நாட்டுக்கு படை வீரர்களை அனுப்பும்படி சிரியா அரசு கேட்டுக்கொண்டால், அது குறித்து நிச்சயம் பரிசீலிப்போம்’ என்றுள்ளார்.
சிரியாவில் கடந்த 2011 முதல் உள்நாட்டுப் போர் இடம்பெற்று வருகிறது. சிரிய ஜனாதிபதி அஸாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. இதன் ஊடாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளை அரச படையினர் மீட்டுவிட்டனர்.
இந்நிலையில் கிளர்ச்சிப்படையினர் கடந்த வாரம் திடீரென அலெப்போ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். தற்போது மற்றொரு முக்கிய நகரமான ஹமாவையும் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர்.