Connect with us

உலகம்

சொந்தக் கட்சித் தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட தென் கொரிய ஜனாதிபதி!

Published

on

Loading

சொந்தக் கட்சித் தலைவரை கைது செய்ய உத்தரவிட்ட தென் கொரிய ஜனாதிபதி!

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) செவ்வாய் (03) இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது, ​​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்ய உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

கைது பட்டியலில் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மற்றும் மூன்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என்று தேசிய புலனாய்வு சேவையின் துணை பணிப்பாளர் ஹாங் ஜாங்-வோன் கூறியுள்ளார்.

Advertisement

வெள்ளிக்கிழமை முழுவதும் நாட்டின் அரசியல் கட்சிகள் அவசரக் கூட்டங்களை நடத்தியும், யூன் மீதான குற்றச்சாட்டுக்கு வாக்கெடுப்பு நடத்த எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் நிறைவேற்றப்படும்.

300 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

Advertisement

ஆனால் பதவி நீக்கப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குத் தேவையான 200 வாக்குகளைப் பெற குறைந்தபட்சம் எட்டு ஆளும் கட்சி எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

அவரது சொந்தக் கட்சி இப்போது எதிர்க்கட்சியுடன் இணைந்து வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கட்சியின் தலைவர் வெள்ளிக்கிழமை (06) யூனை விரைவாக இடைநீக்கம் செய்ய அழைப்பு விடுத்தார்.

அவர் ஆட்சியில் நீடித்தால் ஜனநாயகத்திற்கு “பெரிய ஆபத்தை” ஏற்படுத்துவார் என்று கூறினார்.

Advertisement

செவ்வாயன்று “அரசவிரோதக் குற்றச்சாட்டில்” முக்கிய அரசியல்வாதிகளை கைது செய்ய யூன் உத்தரவிட்டார் என்பதற்கு “நம்பகமான ஆதாரங்கள்” இருப்பதாக வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு சேவையின் துணை பணிப்பாளர் ஹாங் ஜாங்-வோன் குறிப்பிட்டார்.

சியோலுக்கு தெற்கே உள்ள குவாச்சியோனில் உள்ள தடுப்பு மையத்தில் கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகளை சிறையில் அடைக்க யூன் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யூன் பதவியில் நீடித்தால், இராணுவச் சட்டப் பிரகடனம் போன்ற “தீவிர நடவடிக்கைகள்” மீண்டும் நிகழலாம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன