இலங்கை
பண்டிகை காலத்தில் முட்டைகளுக்கான விலை அதிகரிக்கப்படுமா?

பண்டிகை காலத்தில் முட்டைகளுக்கான விலை அதிகரிக்கப்படுமா?
முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 – 36 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்யப்படுவதாகவும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
ஆகவே முட்டையின் சில்லறை விலையை விட குறைவாகவே பேண எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அரிசி மற்றும் மக்காச்சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.