Connect with us

இலங்கை

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி!

Published

on

Loading

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி!

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்  பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் நேற்றைய தினம் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

இச் செயற்பாட்டில் முதலாவதாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” எனும் வாசகம் தங்கிய கைப்பட்டி குழுக்களில் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய அங்கத்தவர்களால் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கும் இந்த கைப்பட்டி அணிவிக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

Advertisement

மேலும் ,வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் தொடர்பான செய்திகள் சித்திரக்கதைகள் அல்ல என்றும் , வாழ்க்கை தொடர்பான விடயங்கள் என்பதால், அவை தொடர்பான ஊடக அறிக்கையிடல்களில் கவனம் தேவை எனவும் 

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் அறியாதவர்களால் அல்ல என்றும் மிகவும் நெருக்கமானவர்களால் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் குறிப்பிடுகையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக 1938 எனும் இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார். 

Advertisement

அவ்வாறான வன்முறைகள் தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் 

பெண்கள் மீதான கணினி ஊடாக மேற்கொள்ளும் குற்றங்கள் தொடர்பின் கடினமாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன