பொழுதுபோக்கு
பின்னால் இருந்து டென்ஷன் கொடுத்த சிவாஜி: ஒரு பாட்டுக்கு 20 டேக் வாங்கிய பி.சுசீலா; இந்த பாட்டு தான்!

பின்னால் இருந்து டென்ஷன் கொடுத்த சிவாஜி: ஒரு பாட்டுக்கு 20 டேக் வாங்கிய பி.சுசீலா; இந்த பாட்டு தான்!
பாடல் பதிவின்போது பாடகி பி.சுசீலா பாடும்போது பின்னால் இருந்து சிவாஜி கணேசன், ஓ என்று கத்தி டென்ஷன் கொடுத்துள்ளார். இதனால் பாடல் பல டேக்குகள் வரை சென்றுள்ளது என்று பி.சுசீலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.தற்போது பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருக்கும் சுசீலா, ஒரு பெரிய ஹிட் பாடலை பாடும்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தொல்லை கொடுத்தால், அந்த பாடல் பல டேக்குகள் வாங்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 1957-ம் ஆண்டு பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் வெளியான படம் தங்கமலை ரகசியம். சிவாஜி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜமுனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டி.ஜி. லிங்கப்பா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் அமுதை பொழியும் நிலவே என்ற பாடலை பி.சுசீலா பாடியிருந்தார். இந்த பாடலை, படத்தில் ஜமுனா பாட வேண்டும். அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பார்க்க வேண்டும். இந்த வேளையில் தன்னை யாரும் பார்த்துவிட கூடாது என்பதால், ஆதிவாசி வேடத்தில் சிவாஜி வந்திருப்பார். ஆனால், அவரை பார்த்துவிட்ட வேலைக்கார பெண், தன் கையில் இருந்த தட்டை கீழே போட்டுவிட்டு கத்திவிடுவார்.இந்த பாடல் பதிவின்போது, பி.சுசீலா முதல்முறையே சரியாக பாடியிருந்தாலும், வேலைக்கார பெண் கத்துவது போன்று குரல் கொடுப்பவர் சரியாக செய்யாமல் சொதப்பியுள்ளார். இதன் காரணமாக முதல்முறையே சரியாக பாடிய பி.சுசீலா, அவர் செய்த தவறால், இவர் மீண்டும் பாட வேண்டிய நிலை உருவானது. இப்படியே பி.சுசீலா 20 முறை மீண்டும் மீண்டும் இந்த பாடலை பாடியுள்ளார். அதன்பிறகே அந்த பெண் சரியாக கத்த பாடல் பதிவு முடிந்துள்ளது.அதேபோல் இந்த பாடல் பதிவின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.சுசீலாவுக்கு டென்ஷன் கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார். பி.சுசீலா பாடும்போது பின்னால் இருந்து மைக்கை பிடித்துக்கொண்டிருக்கும் சிவாஜி, அவர் எப்போது பாடி முடிப்பார் என்று பார்த்துக்கொண்டே இருந்து பாடல் பாடி முடித்தவுடன், கத்திவிடுவாராம். இதனாலும் அந்த பாடல் பதிவு செய்வதில் பெரிய டேக் எடுத்ததாக பி.சுசீலா கூறியுள்ளார்“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil