Connect with us

இந்தியா

“வினோத் காம்ப்ளிக்கு உதவுகிறோம்… ஆனால் ஒரு கண்டீஷன்…” – 1983 இந்திய அணி வெளியிட்ட அறிவிப்பு

Published

on

“வினோத் காம்ப்ளிக்கு உதவுகிறோம்... ஆனால் ஒரு கண்டீஷன்...” - 1983 இந்திய அணி வெளியிட்ட அறிவிப்பு

Loading

“வினோத் காம்ப்ளிக்கு உதவுகிறோம்… ஆனால் ஒரு கண்டீஷன்…” – 1983 இந்திய அணி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் தற்போதைய உடல்நிலை குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Advertisement

பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ச்ரேக்கரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில், சச்சின் டெண்டுல்கர், பிரவீன் ஆம்ரே, பல்விந்தர் சிங் சாந்து மற்றும் சஞ்சய் பங்கார் ஆகியோருடன் மேடையில் கலந்து கொண்ட வினோத் காம்ப்ளி உடல் ரீதியாக பலவீனமாக காணப்பட்டார். நிகழ்ச்சியின் போது, தனது சிறுவயது நண்பர் டெண்டுல்கரை தழுவிக்கொண்டு நிற்கும் காம்ப்ளியின் வீடியோ மிகவும் வைரலானது. மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியது.

காம்ப்ளியின் சிரமங்கள் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்துள்ளன. மதுப்பழக்கத்தால், கிரிக்கெட் வட்டாரத்தில் பல நண்பர்களுடன் அவருக்கு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. குடிப்பழக்கத்தால் அவரது உடல்நிலை தற்போது மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியினர் காம்ப்ளிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். ஆனால், அவர்கள் காம்ப்ளிக்கு ஒரு கண்டிஷனை வைத்துள்ளனர். அதாவது, காம்ப்ளி முதலில் தன்னை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். மறுவாழ்வு மையத்திற்கு செல்ல அவர் ஒப்புக்கொண்டால், நாங்கள் அவருக்கு உதவ தயார் என 1983 உலகக்கோப்பை அணியின் கேப்டன் கபில் தேவ் சொல்லியதாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சாந்து தெரிவித்தார்.

“அவர் சிகிச்சைக்கு தயாராக இருந்தால் மட்டுமே, சிகிச்சைக்கான முழு செலவையும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம். சிகிச்சை எவ்வளவு நாளாக இருந்தாலும், நாங்கள் நிதி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்,” என கபில் தேவ் கூறியதாக சாந்து தெரிவித்தார்.

கபில் தேவ் மற்றும் அவரது 1983 உலகக்கோப்பை அணி இதற்கு முன்னரும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி உதவி செய்துள்ளனர். இதற்கு முன்னர், முன்னாள் துவக்க வீரர் மற்றும் பயிற்சியாளரான அன்ஷுமான் கெய்க்வாடுக்கு புற்றுநோயுடன் போராட நிதி உதவி செய்துள்ளனர்.

Advertisement

வினோத் காம்ப்ளியின் நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் முதல் தர அணி அம்பையரான மார்க்கஸ் கவுட்டோ, “காம்ப்ளிக்கு பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன,” என ஆங்கில செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.

“அவரை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்வது பயன் இல்லை. காம்ப்ளி இதற்கு முன் 14 முறை மறுவாழ்வு மையத்திற்குச் சென்றுள்ளார். அதில் மூன்று முறை நாங்களே அழைத்துச் சென்றோம்,” என அவர் கூறினார்.

வினோத் காம்ப்ளி 1993 ஆம் ஆண்டில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரைத் தொடங்கினார். அவர் 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1,084 டெஸ்ட் ரன்கள் மற்றும் 2,477 ஒருநாள் ரன்களைச் சேர்த்துள்ளார். தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காம்ப்ளி, தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் பல சதங்களைப் பதிவு செய்தார்.

Advertisement

அவரின் பிரச்சினைகள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்து தொடர்ந்து விவாதிக்கப்படுவதால், காம்ப்ளியின் உடல்நிலை மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன