விளையாட்டு
7 சிக்சர்கள்..! 191 ஸ்ரைக் ரேட்..! சூர்ய குமாரை எதிரில் வைத்து ருத்ரதாண்டவம் ஆடிய சிஎஸ்கே வீரர்…

7 சிக்சர்கள்..! 191 ஸ்ரைக் ரேட்..! சூர்ய குமாரை எதிரில் வைத்து ருத்ரதாண்டவம் ஆடிய சிஎஸ்கே வீரர்…
சையத் முஷ்டாக் அலி தொடரின் நேற்றைய போட்டியில், மும்பை அணி, சர்விசஸ் அணியுடன் மோதியது. மும்பை அணியில் பிரித்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரஹானே ஆகியோர் இடம்பெற்றிருந்தார்கள்.
இந்தியாவின் T20 கேப்டனான சூர்யகுமார் யாதவ், இந்தத் தொடரின் முதல் போட்டியில் நேற்று விளையாடினார். டாஸ் வென்ற சர்விசஸ் அணி பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய பிரித்வி ஷா, ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பிறகு வந்த ரஹானே 22 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 22 ரன்களும் எடுத்து வெளியேற, சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார் ஷிவம் துபே.
இருவரது பார்ட்னர்ஷிப்பிலும் ரன்கள் குவிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து 11 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடித்தனர். அதில் துபே மட்டுமே 7 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம் ஷிவம் துபே 37 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் 46 பந்துகளில் 70 விளாசி 20ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சர்விசஸ் அணி, 20 ஓவர்களில் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
3 மாத காயத்திற்குப் பிறகு வந்த ஷிவம் துபே, மீண்டும் சிக்ஸர் துபேவாக நேற்று உருவெடுத்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணியில் சற்றுத் தடுமாறிய துபே, அடுத்த ஆண்டு ஐபிஎல் வரும் நிலையில், மீண்டும் தனது அதிரடி ஃபார்முக்கு வந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.