Connect with us

இந்தியா

கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..? ஆய்வுக்குழு முடிவு..!

Published

on

கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..? ஆய்வுக்குழு முடிவு..!

Loading

கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா..? ஆய்வுக்குழு முடிவு..!

Advertisement

ஃபெஞ்சல் புயல் எதிரொளியாக பெய்த கனமழையால், 2.,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மகாதீப மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.

வரும் 13ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், மலையின் ஈரப்பதம் காரணமாக மகாதீபம் ஏற்றும் நாளில் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறை தெரிவித்தது.

இதனை அடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Advertisement

அப்போது, இன்று வல்லுநர் குழுவை மலைமீது அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் மலையின் நிலையை ஆய்வு செய்ய இன்று செல்வார்கள் எனவும்,

Advertisement

அவர்களுக்கு உதவியாக பாதுகாப்பு உபகரணங்களுடன் காவல்துறையினர், மருத்துவர்கள், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவும் உடன் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தீபத்திருவிழா அன்று மலை மீது பக்தர்களை அனுமதிக்கலாமா என தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன