சினிமா
திரிஷாவே ஜோடியாக நடித்த ஸ்ரீகாந்த்க்கு ஜோடி இவரா!! ஹீரோயினை பார்த்து கலாய்த்த நெட்டிசன்கள்..

திரிஷாவே ஜோடியாக நடித்த ஸ்ரீகாந்த்க்கு ஜோடி இவரா!! ஹீரோயினை பார்த்து கலாய்த்த நெட்டிசன்கள்..
2002ல் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவருக்கு ஜோடியாக நடிகை பூமிகாவும் நடிகையாக அறிமுகமாகினார்.இப்படத்தினை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தொல், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஸ்ரீகாந்துக்கு அதன்பின் நடித்த படங்கள் சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த் Sshh என்ற ஆஹா வெப் தொடரில் நடித்துள்ளார்.இந்நிலையில், வாய்ப்பே இல்லாத ஸ்ரீகாந்த், தினசரி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் சந்தியா தயாரித்து ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.சமீபத்தில் இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியாக்கியுள்ளது. திரிஷா, பூமிகாவுடன் ஜோடிப்போட்டு நடித்த ஸ்ரீகாந்தின் ஹீரோயினை பார்த்து பலரும் கலாய்த்து வருகிறார்கள்.