உலகம்
பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் நோட்ர டேம் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு!

பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் நோட்ர டேம் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு!
பிரான்ஸ் தலைநகர் பெரிசில் அமைந்துள்ள Notre-Dame தேவாலயம் மறுசீரமைப்பின் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மீள திறக்கப்படவுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் தேவாலயத்தின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்தது. அன்று முதல் இன்று வரை ஆலயத்தின் மறுசீரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் நாளைய தினம் Notre-Dame தேவாலயம் திறக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு நிகழ்வை முன்னிட்டு நாளைய தினம் விசேட பிரார்த்தனைகளும் குறித்த தேவாலயத்தில் இடம்பெறவுள்ளன. யுனெஸ்கோவின் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த பகுதியான Notre-Dame தேவாலயம் 12ம் நூற்றாண்டின் சொத்துக்களை தம்வசம் வைத்திருந்த நிலையில் அவையும் எவ்வித பாதிப்பும் இன்றி மீளமைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.