Connect with us

உலகம்

லெபனானில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் வழங்கும் ஹிஸ்புல்லா!

Published

on

Loading

லெபனானில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் வழங்கும் ஹிஸ்புல்லா!

 இஸ்ரேலுடனான 14 மாத கால போரினால் லெபனானில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு நபருக்கு 300 – 400 அமெரிக்க டொலர் வரை இரண்டு இலட்சத்து 33 ஆயிரத்து 500 பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 77 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை வழங்கப்படும் என ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வாடகையாக 6,000 அமெரிக்க டொலரும் தலைநகருக்கு வெளியே வசிப்பவர்களுக்கு 4,000 அமெரிக்க டெலரும் வீடுகளை இழந்தவர்களுக்கு 8,000 அமெரிக்க டொலர் வீதம் ஹிஸ்புல்லா அமைப்பு நிதி ஒதுக்கியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பண ஆதாரமாக இருக்கும் ஈரானின் உதவியுடன் இந்த நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

காசாவுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3500க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவராக நைம் காசிம் செயற்படுகிறார்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வங்கியின் தரவுகளின்படி, 14 மாத காலப்போரில் லெபனானில் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3.2 பில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன