இலங்கை
அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் முறைப்பாடு!

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்று தெரிவித்தே அவர் மீது மருத்துவமனை நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்குள் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அங்கு இயல்புநிலைமையைக் குழப்பினார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தினார் என்று தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினரும் – மருத்துவருமான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான மன்னார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்று பிணை அனுமதி வழங்கியிருந்தநிலையில், அந்த வழக்குத் தற்போது மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. (ப)