பொழுதுபோக்கு
ஆக்ஷன் விக்ரம்… மிரட்டல் எஸ்.ஜே.சூர்யா: வீர தீர சூரன் டீசர் வைரல்!

ஆக்ஷன் விக்ரம்… மிரட்டல் எஸ்.ஜே.சூர்யா: வீர தீர சூரன் டீசர் வைரல்!
விக்ரம் எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில், அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-ம் பாகம் ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தனது கேரக்டரருக்காக அதிகம் உழைக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். சேது, காசி, அந்நியன், பிதாமகன் என வித்தியாசமான பல படங்களை கொடுத்துள்ள இவர், சாமி போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்து தன்னை நிரூபித்துள்ளார். கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகன் பார்வதி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனாலும் படத்தில் விக்ரமின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவையும் பாராட்டுக்களையும் கொடுத்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு தற்போது விக்ரம் நடித்து வரும் படம் வீர தீர சூரன்.பன்னையாரும் பத்மினியும் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அருண்குமார், அடுத்து சேதுபதி, சிந்துபாத் என விஜய் சேதுபதி நடிப்பில் இரு படங்களை இயக்கியிருந்தார். அதன்பிறகு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதன்பிறகு தற்போது விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படத்தை இயக்கி வருகிறார்.2 பாகங்களாக தயாராகி வரும் இந்த படம் முதலில் 2-ம் பாகம் வெளியாகும் என்று அறிவித்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். விக்ரமுடன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெர்சிமூடு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ள வீர தீர சூரன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆகஷனுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“