இலங்கை
இலங்கையில் மீண்டும் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையில் மீண்டும் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவில் இருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் இலங்கைக்குச் வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.