சினிமா
ஐஸ்வர்யா- அபிஷேக் விவாகரத்து.. கடுப்பான அமிதாப்பச்சன், வெளியிட்டுள்ள நெத்தியடி பதிவு

ஐஸ்வர்யா- அபிஷேக் விவாகரத்து.. கடுப்பான அமிதாப்பச்சன், வெளியிட்டுள்ள நெத்தியடி பதிவு
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான். 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா நிறைய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.இந்த ஜோடி விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அவ்வப்போது இணையத்தில் செய்திகள் உலா வருகின்றது.சமீபத்தில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.இந்நிலையில், அமிதாப்பச்சன் விவாகரத்து குறித்து வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “முட்டாள்கள்,குறைந்த மூளை கொண்டவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் இதுபோன்று ஒரு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.