இலங்கை
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடி ரூபா மோசடி… வவுனியாவில் கைதான இளைஞன்!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடி ரூபா மோசடி… வவுனியாவில் கைதான இளைஞன்!
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி வவுனியாவில் 16 பேரிடமிருந்து 1 கோடி 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இளைஞனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் குறித்த இளைஞன் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார்.
குறிப்பாக ஒவ்வொருவரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபா வரை பணம் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட 16 பேர் வவுனியா பொலஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 16 பேரிடமும் சிறு தொகையாக பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளார்.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.