இலங்கை
காணாமல் போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் விசாரணை!

காணாமல் போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் விசாரணை!
கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மாதம் நாணயச் செயற்பாடுகளின் போது அதன் பெட்டகங்களில் ஒன்றிலிருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனதாகக் கூறி, மத்திய வங்கியினால் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும், கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மத்திய வங்கி இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் உள்கட்டுப்பாடுகள், செயல்முறைகள் போன்றவற்றை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட்ட அவர், பொலிஸாரின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு மத்திய வங்கி தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். (ப)