இந்தியா
கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப்

கிச்சன் கீர்த்தனா: மூலிகை சூப்
உணவே மருந்தாக இருந்த காலம் மாறி, இப்போது மருந்துகளையே உணவாக உட்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். முடிந்தவரை மூலிகைகளைத் தினசரி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா இடங்களிலுமே கிடைக்கக்கூடிய துளசி, தூதுவளை, முசுமுசுக்கு, கற்பூரவல்லி போன்றவற்றை கொண்டு இந்த மூலிகை சூப் அருந்தலாம். இது சளி, இருமல், சோர்வு, வாய்வு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்; ஜீரணச் சக்தி அதிகரிக்க உதவும்.
அரைக்க…
தூதுவளைக் கீரை – அரை கப்
முசுமுசுக்கு இலை – 6
துளசி இலைகள் – 4
வெல்லம் – ஒரு சிட்டிகை
கற்பூரவல்லி இலை – ஒன்று (பெரியது)
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – 10
மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று (சிறியது)
கறிவேப்பிலை – 6 இலைகள்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக, ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறிய பின் எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பருகவும்.