Connect with us

சினிமா

குருவாயூர் கோவிலில் நடைபெற்ற ஜெயராம் மகனின் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

குருவாயூர் கோவிலில் நடைபெற்ற ஜெயராம் மகனின் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…

Loading

குருவாயூர் கோவிலில் நடைபெற்ற ஜெயராம் மகனின் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் – தாரணி காலிங்கராயர் இடையே குருவாயூர் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

பிரபல நடிகரான ஜெயராம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். தமிழில் உங்களது நடிப்பில் வெளிவந்த “பஞ்சதந்திரம்”, “தெனாலி” உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. “துப்பாக்கி” படத்தில் இவரது கேரக்டர் கவனம் பெற்றது.

இதேபோன்று “பொன்னியின் செல்வன்” முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இவர்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தற்போது வளர்ந்து வரும் நடிகராக மாறியுள்ளார். காளிதாஸ் ஜெயராம் விக்ரம், இந்தியன் 2 படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.

“ராயன்” படத்தில் தனுஷின் தம்பியாக காளிதாஸ் நடித்திருந்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே காளிதாஸ் மற்றும் மாடலாக இருக்கும் தாரணி காலிங்கராயர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

Advertisement

இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர்.

மலையாள சினிமா நடிகர், நடிகைகளும், கேரளா எம்.பி. சுரேஷ்கோபி, சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் உள்பட முக்கிய விஐபிகள் மற்றும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன