இலங்கை
குளிர்கால நோய்த் தொற்றுகளுக்கு குட்பை சொல்லுங்க!

குளிர்கால நோய்த் தொற்றுகளுக்கு குட்பை சொல்லுங்க!
பருவகால நோய்த் தொற்றுகளுக்கு எதிராக இயற்கையான பாதுகாப்பை இஞ்சி வழங்குகிறது.
தற்போது குளிர் காலநிலை நிலவுவதனால் சளி, இருமலால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள வரை அவதிக்கபப்டுகின்றனர்.
இந்நிலையில் இஞ்சி சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்.
குளிர்காலம் அல்லது மழைக் காலங்களில் பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
பொதுவாக, இருமலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வறட்டு இருமல், மற்றொன்று சளியுடனான இருமல்.
ஒருவர் பல நாட்களாக இருமலை அனுபவித்தால், அது பல நோய்களுக்கான அறிகுறியாகும்.
மேலும் இருமலானது ஒருவரை அசௌகரியமாக உணர வைக்கும். அதில் வறட்டு இருமல் வறட்சியான குளிர் காற்றினால் ஏற்படக்கூடியது.
அதே சமயம் சளியுடனான இருமலின் போது சளி வெளிவரக்கூடும். இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் எடுத்த எடுப்பிலேயே இருமலுக்கான சிரப் மற்றும் மருந்துகளை எடுப்பதற்கு பதிலாக இயற்கை வழிகளை முயற்சிப்பது சிறந்த பலனை அளிக்கும்.
எனவே காலை இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் குளிகால தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும்.