சினிமா
சின்ன தளபதிக்காக பிக் பாஸ் ரூல்ஸை மீறும் பிக் பாஸ்! இது தான் முதல் முறை!

சின்ன தளபதிக்காக பிக் பாஸ் ரூல்ஸை மீறும் பிக் பாஸ்! இது தான் முதல் முறை!
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் 100 நாட்களை டார்கெட் செய்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது சுவாரஷ்யமான ஒளிபரப்பாகி வருகிறது.ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை டிவியிலோ அல்லது ஹாட் ஸ்டார் ஓடிடியிலோ பார்த்து வந்தாலும், இன்னும் சிலர் ஓடிடியில் லைவ்-வாக ஒளிபரப்பாகும் வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் சிவகார்த்திகேயனுக்காக தன்னுடைய ரூல்ஸை மாற்றி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை வெளியுலக தொடர்பே இருக்க கூடாது என்பதே விதி. எனவே வெளியில் நடக்கும் விஷயங்கள் போட்டியாளர்களுக்கு எந்த விதத்திலும் தெரியப்படுத்த கூடாது என்பது உறுதியாக இருப்பார்.பிரீஸ் டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் பெற்றோர் உள்ளே சென்றால் அவர்களுக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்படும். ஆனால் இந்த ரூல்ஷ் தற்போது மீறியுள்ளதாக வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் சிவாகார்த்திகேயன் நடித்து வெளியான ‘அமரன்’ படத்தை போட்டியாளர்களுக்கு காட்டியுள்ளார்கள். இது பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், நெட்டிசன்கள் பலர் இதனை விமர்சனம் செய்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.