இந்தியா
சிறுமி காண்பித்த அந்த சைகை… அதிர்ச்சியான உறவினர்கள்… போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்!

சிறுமி காண்பித்த அந்த சைகை… அதிர்ச்சியான உறவினர்கள்… போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்!
சென்னை மாங்காடு அடுத்த முகலிவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த வடமாநில பெண்ணின் இரண்டு வயது குழந்தை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் அந்த குழந்தையை கழுத்தை நெரித்து தண்ணீரில் முக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு ஓடி வந்த குழந்தையின் உறவினர்கள் வடமாநில நபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மாங்காடு போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் நடந்த சம்பவம் குறித்து குழந்தையிடம் விசாரித்தபோது, தன்னை அந்த நபர் தான் கழுத்தை நெரித்தும், வாயைப் பொத்தியும் இழுத்துச் சென்று தண்ணீரில் முக்கியதாக சைகை காண்பித்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் உண்மை தன்மை குறித்து மாங்காடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபரின் பெயர் உமர் என்பதும், அவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் போதையில் இருந்து வருவதால் போலீசாரின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல் இச்சம்பவத்தை வைத்து, தவறான தகவல்களை திரித்து வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.