சினிமா
செல்லநாய் படத்தை போட்டு, அந்த லவ் மாதிரி வருமா? சமந்தா தாக்கியது யாரை?

செல்லநாய் படத்தை போட்டு, அந்த லவ் மாதிரி வருமா? சமந்தா தாக்கியது யாரை?
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் நான்கே வருடங்களில் திருமணத்தை முறித்துக்கொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
சமீபத்தில் நடிகை சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா அமைச்சர் சுரேகா, நாக சைதன்யா – சமந்தா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நாகர்ஜூனா குடும்பத்தினர், சமந்தா, நாகசைதன்யா ஆகியோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இந்த விவாகரத்தின் போதுதான், நாகசைதன்யாவுடன் சேர்ந்து சமந்தா ரியாக்ட் காட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி நாகசைதன்யா, நடிகை சோபிதா தூலி பாலாவை திருமணம் செய்தார். ஹைதரபாத்தில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு, நடிகர் நகர்ஜூனா திருமண பரிசாக புது மண தம்பதிக்கு 2.50 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் காரை வழங்கினார்.
இந்த நிலையில், நாகசைன்யாவுக்கு திருமணம் நடந்த சமயத்தில் நடிகை சமந்தா, இன்ஸ்டா பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். அதில், தனது செல்ல நாயான சஷாவுடன் சமந்தா இருக்கிறார். கேப்ஷனாக ‘சாஷா லவ் போல வேறு எந்த லவ்வும் இல்லை ‘ என்று கொடுத்துள்ளார். நாகசைதன்யாவை மறைமுகமாக தாக்கிதான் சமந்தா இந்த பதிவை பேட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
10 நாளில் சிரியாவை சோலி முடித்த தளபதி… யார் இந்த அபு முகமது அல் – ஜோலானி?
புதுவை முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!