சினிமா
நாக சைதன்யா – நடிகை சோபிதா ஹனிமூனிற்கு எங்கு செல்கிறார்கள் தெரியுமா..

நாக சைதன்யா – நடிகை சோபிதா ஹனிமூனிற்கு எங்கு செல்கிறார்கள் தெரியுமா..
நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.சமந்தவுடனான விவாகரத்துக்கு பின் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய காதலை நிச்சயதார்த்தம் மூலம் உறுதி செய்தனர்.கடந்த 4ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கையோடு இருவரும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.இந்த நிலையில், நாக சைதன்யா சோபிதா ஹனிமூன் செல்லவிருக்கும் இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சோபிதா, தனது ஹனிமூனிற்கு ஐஸ்லாந்துக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுவதாக சோபிதா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.