Connect with us

சினிமா

மீண்டும் இணைந்த ஜி.வி பிரகாஷ் – சைந்தவி ஜோடி… ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய இசை நிகழ்ச்சி!

Published

on

மீண்டும் இணைந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி ஜோடி... ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய இசை நிகழ்ச்சி!

Loading

மீண்டும் இணைந்த ஜி.வி பிரகாஷ் – சைந்தவி ஜோடி… ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய இசை நிகழ்ச்சி!

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தம்பதிகளில் ஒருவராக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருந்தனர். பள்ளி தோழர்களான இருவரும் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் ஏராளமான பாடல்களை இருவரும் இணைந்து வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னால் ஜிவி பிரகாஷ் – சைந்தவி ஆகியோர் தாங்கள் பரஸ்பரம் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மிகவும் இளம் வயதில் இவர்களது மணமுறிவு ஏற்பட்டிருப்பது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்து செய்து கொண்டாலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று இருவரும் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை பாடியுள்ளார்கள்.

Advertisement

தனுஷ் நடித்த “மயக்கம் என்ன’’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘‘பிறை தேடும் இரவிலே’’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள். விவாகரத்து ஏற்பட்ட பின்னரும் இருவரும் நண்பர்களாக ஒரே இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களை பாடி இருப்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🥹😭❤️ https://t.co/9AMvTOXhDv pic.twitter.com/l81cK0XN6w

Advertisement

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பான சில வீடியோக்கள் கவனம் பெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன