சினிமா
விவாகரத்துக்கு பின்னர் லண்டன் செல்லும் தனுஷ்! அமோகமாக வரவேற்ற ரசிகர்கள்!

விவாகரத்துக்கு பின்னர் லண்டன் செல்லும் தனுஷ்! அமோகமாக வரவேற்ற ரசிகர்கள்!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் , ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக ராயன் எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது குபேரா, இட்லி கடை போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். தனுஷ், இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார்.இதைத்தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தனுஷுக்கு தமிழ்நாட்டில் மட்டுமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் லண்டனிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது நடிகர் தனுஷ் லண்டனில் நடந்த ஒரு உணவக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகர் தனுஷை காண லண்டன் மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.