இலங்கை
37 வயது நபர் ஒருவர் அடித்து கொலை ; பெண் உட்பட இருவர் கைது

37 வயது நபர் ஒருவர் அடித்து கொலை ; பெண் உட்பட இருவர் கைது
வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், இப்பலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலவ்வேகம பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொலை செய்யப்பட்டவர் கடந்த சனிக்கிழமை (07) இரவு தனது வீட்டில் மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
கொலை சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய நபரும் 29 வயதுடைய பெண்ணும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.