இந்தியா
இத கவனிங்க: தீபத்திருவிழாவுக்கு திருவண்ணாமலை போக போறீங்களா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…

இத கவனிங்க: தீபத்திருவிழாவுக்கு திருவண்ணாமலை போக போறீங்களா..? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…
கார்த்திகை தீபம் – சென்னை டூ திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. வெகு விமரிசையாக கொண்டாடப்படும், கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவினை காண தமிழகமெங்கும் உள்ள பக்தர்களின் கூட்டம் திருவண்ணாமலை நோக்கி அலைமோதும்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,192 பேருந்துகளும் மற்ற நகரங்களில் இருந்து 8,127 பேருந்துகளும் டிச.12,13,14,15 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக சிறப்பு பேருந்துகளுடன், கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவும், அரசு போக்குவரத்துக் கழக செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.