Connect with us

இந்தியா

இருக்கும் சிக்கலில் இளவரசருக்கு முன் இருக்கை அவசியமா மன்னா?. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

Published

on

Loading

இருக்கும் சிக்கலில் இளவரசருக்கு முன் இருக்கை அவசியமா மன்னா?. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

சினிமாவில் நெப்போடிசம் என்பதை தாண்டி அரசியலில் அது வந்து விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டம் தான்.

அரசியல் குடும்பத்தை சேர்ந்திருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கேரியரை தொடங்கியது சினிமாவில் தான். இதை தொடர்ந்து 2018 இல் இருந்து தன்னை அரசியலில் இணைத்துக் கொண்டார்.

Advertisement

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆனார். அதை தொடர்ந்து குறுகிய காலகட்டத்திலேயே விளையாட்டு துறை அமைச்சரானார்.

தற்போது தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றிருக்கிறார். அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஏழாவது வருடத்தில் துணை முதலமைச்சர் ஆகி இருக்கிறார்.

இந்த பாக்கியம் தற்போது இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூட கிடைக்கவில்லை. நேற்று நடந்த சட்டமன்ற தொடரில் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசை மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

முதல் இடம் முதலமைச்சருக்கு, இரண்டாவது இடம் அவை முன்னவர் துரைமுருகனுக்கு, மூன்றாவது இடம் துணை முதலமைச்சர் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சேப்பாக்கம் எம்எல்ஏவாக பத்தாவது வரிசையில் உட்கார்ந்து இருந்த உதயநிதி ஸ்டாலின் இந்த நான்கு வருடத்திற்குள் முதல் இருக்கைக்கு முன்னேறி இருக்கிறார்.

எத்தனையோ சீனியர்கள் கட்சியில் இருக்கும் பொழுது உதயநிதி ஸ்டாலினின் இந்த முன்னேற்றம் பெரிய அளவில் சர்ச்சையாக இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன