Connect with us

தொழில்நுட்பம்

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் QLED + MiniLED 4K ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Published

on

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் QLED + MiniLED 4K ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Loading

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் QLED + MiniLED 4K ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

Advertisement

65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் இந்த டிவிகள் கிடைக்கும். இந்த தொலைக்காட்சிகளின் டிஸ்பிளே பேனல்களில் டால்பி விஷன் ஆதரவுடன் வருகின்றன. மேலும், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவிகள் வருகின்றன. இந்த மாடல்களில் 60W அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் கொண்ட 2.1 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்தியாவில் ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் MiniLED 4K ஸ்மார்ட் டிவியின் 65 இன்ச் மாடல் ரூ.89,999 விலையிலும், அதே சமயம் 75 இன்ச் மாடல் ரூ.1,39,999 விலையிலும் கிடைக்கும். இந்த டிவிகள் தற்போது அமேசான் வழியாக கிடைக்கின்றன.

Advertisement

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் MiniLED 4K ஸ்மார்ட் டிவி ஆனது 3,840 x 2,160 பிக்சல் ஸ்மார்ட் டிவிகள் QLED மற்றும் Mini LED ஹைப்ரிட் ஸ்கிரீன்களுடன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1,400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகின்றன. இவை டால்பி விஷன் மற்றும் HDR10 ஆதரவை கொண்டுள்ளன. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது. இந்த புதிய டிவிகள் AI-பேக்டு டூயல் ப்ராசசர் ஆர்க்கிடெக்சுர் (A77 + A55) மூலம் டிவிகள் இயக்கப்படுகின்றன.

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் MiniLED 4K ஸ்மார்ட் டிவிகள் ஆனது டிவிக்கான ஆண்ட்ராய்டு 14 உடன் கூகுள் டிவியை இயக்குகின்றன. லைன்அப் மாடல்களில் இன்புல்டு Chromecast ஆதரவு உள்ளது. மேலும், டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.2, HDMI மற்றும் USB கனெக்ட் ஆகியவற்றை வழங்குகின்றன. அவை வாய்ஸ் ஸ்மார்ட் ரிமோட்டுடன் வருகின்றன. இதில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்கிகள் உள்ளன.

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் MiniLED 4K ஸ்மார்ட் டிவிகளில் 2.1 சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 60W அவுட்புட் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகின்றன. இந்த இரண்டு மாடல்களும் டேபிள் மற்றும் சுவரில் பொருத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 இன்ச் ஆப்ஷன் ஆனது 70x1448x838 மிமீ மற்றும் 21.2 கிராம் எடையும், 75 இன்ச் ஆப்ஷன் ஆனது 74x1658x965 மிமீ மற்றும் 30.2 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன