இலங்கை
சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், அலங்காரங்களை திருடும் கும்பல்! சுவிஸில் சம்பவம்

சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், அலங்காரங்களை திருடும் கும்பல்! சுவிஸில் சம்பவம்
சுவிஸில் உள்ள சூரிச்சின் Oberrieden நகரசபை இடுகாட்டில் பூக்கள், அலங்காரப் பொருட்கள் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுகாட்டில் கடந்த 3 மாதங்களில் புதைக்கப்பட்டவர்களின் சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், மற்றும் அலங்காரங்கள் திருடப்படுவது, குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கடந்த 3 மாதங்களில் 30 முறைப்பாடுகள் வரை கிடைத்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருடர்களை கட்டுப்படுத்த நகரசபையினால் இடுகாட்டில் சிசிரிவி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.