இலங்கை
சார்ஜென்ட் உதட்டை காயப்படுத்திய கான்ஸ்டபிள்

சார்ஜென்ட் உதட்டை காயப்படுத்திய கான்ஸ்டபிள்
உயர்தர பரீட்சைகளுக்கான கடமைகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் வந்து பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரை தாக்கிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.
அம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன்ட் , மேல் உதடு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.