Connect with us

இலங்கை

தொழில்நுட்ப உலகில் புரட்சி ; கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சிப்

Published

on

Loading

தொழில்நுட்ப உலகில் புரட்சி ; கூகுள் உருவாக்கியுள்ள குவாண்டம் சிப்

புதிய தலைமுறை சிப் மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு முக்கிய சவாலை சமாளித்துவிட்டதாக கூகுள் திங்களன்று (10) கூறியது.

தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம், வில்லோ என்ற குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் குவாண்டம் ஆய்வகத்தில் இந்த புதிய சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சிக்கலான கணக்குகளையும் கூட இந்த சிப் மூலம் வெறும் ஐந்து நிமிடங்களில் தீர்க்க முடியுமாம்.

அதாவது வழக்கமான கம்ப்யூட்டர் பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்குகளைக் கூட இது 5 நிமிடங்களில் முடித்துவிடுமாம்.

Advertisement

இது தொடர்பாகக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஒரு சிக்கலான கணக்கை வில்லோ ஐந்து நிமிடங்களில் செய்து காட்டியது.

இப்போது இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் கூட இந்த கணக்குகளை முடிக்க 10 செப்டில்லியன் (அதாவது 1025) ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

இது நமது பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வயதை விட அதிகமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இருக்கும் கம்ப்யூட்டிங் அமைப்புகளைத் தாண்டி அதிவேகமான கம்ப்யூட்டிங் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூகுள் இப்போது முதல்முறையாக அப்படியொரு சிப்பை உருவாக்கி இருக்கிறது.

வரும் காலத்தில் இது மருத்துவம், மிக்கல தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பெரியளவில் நமக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாண்டம் சிப் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிப் ஆகும்.

Advertisement

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான கணினிகள் “பிட்கள்” (0 அல்லது 1) மூலம் இயங்கும்.

அதாவது ஒரு நேரத்தில் 0 அல்லது 1 என இரண்டில் எதாவது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

ஆனால், குவாண்டம் சிப்கள் “குபிட்கள்” மூலம் இயங்கும்.

Advertisement

அதாவது 0, 1 என இரண்டுமாக ஒரே நேரத்தில் இந்த குபிட்களால் இயங்க முடியும். இதன் காரணமாகவே சிக்கலான கணக்குகளைக் கூட வேகமாகப் போட முடியும்.

வில்லோ சிப்பில் 105 குபிட்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன