சினிமா
பிரபாஸும் வேண்டாம் அல்லு அர்ஜுனும் வேண்டாம்!! நோ சொல்லி ஒதுக்கும் பிரபல நடிகை..

பிரபாஸும் வேண்டாம் அல்லு அர்ஜுனும் வேண்டாம்!! நோ சொல்லி ஒதுக்கும் பிரபல நடிகை..
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருபவர்களில் இருவர் தான். பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.தி ராஜா சாப், சலார் 2, ஃபைஜு உள்ளிட்ட படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 படம் வெளியாகி 1000 கோடி வசூலை ஒரு வாரத்திற்குள் எட்டவிருக்கிறது.அவருடன் நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவதை போன்று பாலிவுட் நடிகைகளும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்திருக்கிறார்.பல இயக்குன்நர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் பிரபாஸ், அல்லு அர்ஜுன் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேட்டு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருதால் அதை மறுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ல் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தில் கடைசியாக தென்னிந்திய சினிமாவில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.