Connect with us

சினிமா

“ப்பா… சூப்பர்” : ‘அலங்கு’ ட்ரெய்லரை பாராட்டிய ரஜினிகாந்த்

Published

on

Loading

“ப்பா… சூப்பர்” : ‘அலங்கு’ ட்ரெய்லரை பாராட்டிய ரஜினிகாந்த்

அலங்கு திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

உறுமீன்',பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அலங்கு.

Advertisement

இந்த படத்தில் ஹீரோவாக குணாநிதி நடித்துள்ளார். செம்பன் வினோத், சரத் அப்பானி, காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

தமிழக- கேரள எல்லைப் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியிருப்பதாக ஏற்கனவே இயக்குநர் சக்திவேல் கூறியிருந்தார்.

‘அலங்கு’ திரைப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.சபரீஷ், சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளனர். இதன்மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா.

Advertisement

இப்படம் வருகின்ற 27ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்தது.

அந்த வகையில் இன்று (டிசம்பர் 10) சங்கமித்ரா, சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்று அவரைச் சந்தித்தனர்.

Advertisement

இந்தச் சந்திப்பின்போது, அலங்கு படத்தின் ட்ரெய்லர் அவருக்கு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த ரஜினிகாந்த், “ப்பா… என்ன சக்திவேல் சூப்பர்” என பாராட்டினார்.
தொடர்ந்து சங்கமித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இன்று மாலை இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன