நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 10/12/2024 | Edited on 10/12/2024

தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் மோகன் பாபு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும் விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களது குடும்பத்தில் சமீப காலமாக சொத்துப் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மகன் மனோஜ் மஞ்சு தந்தை மோகன்பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. 

இதையடுத்து மோகன் பாபு அவரது மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  அவர் அளித்த புகாரில், “நான் அலுவலகத்தில் இருந்த போது எனது வீட்டில் 30 பேர் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனை எனது மகன் மனோஜ் மஞ்சு மருமகள் மோனிகா இருவரும் செய்துள்ளனர். அவர்கள் தான் சமூக விரோதிகளோடு சேர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

அவர்கள் எங்கள் வீட்டு ஊழியர்களிடம் என்னை வீட்டை விட்டு நிரந்தரமாக போக சொல்லி மிரட்டினார்கள். அதனால் எனது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.