இலங்கை
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அமெரிக்கா பயணத்தடை விதிப்பு!

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அமெரிக்கா பயணத்தடை விதிப்பு!
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரசேகர மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.
இவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உதயங்க வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது ஊழல் நடவடிக்கையைத் திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்துள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, இலங்கை எயார்பஸ்ஸை அதிக விலைக்குக் கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக இலஞ்சம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகின்றது. (ச)