சினிமா
2 கோடியில் போட் ஹவுஸ் வாங்கிய சீரியல் நடிகை ஆலியா மானசா..

2 கோடியில் போட் ஹவுஸ் வாங்கிய சீரியல் நடிகை ஆலியா மானசா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடிகர் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து அவரையே காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி சீரியலில் இருந்து விலகி கர்ப்பமாக முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் ராஜா ராணி 2 சீரியலில் முதல் நடிக்க அதன்பின் மீண்டும் கர்ப்பமாக குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இனியா சீரியலில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். சஞ்சீவும் கயல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.ஒரு நாளைக்கு ஆல்யா மானசா சம்பளமாக 50 ஆயிரம் பெற்று சமீபத்தில் சென்னையில் பல கோடி மதிப்புள்ள வீட்டை கட்டி குடியேறினார்.இதற்கிடையில் புதிய தொழிலையும் ஆரம்பித்து வருமானம் ஈட்டி வரும் ஆல்யா மானசா – சஞ்வீவ் ஜோடி, கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் ஒன்றினை வாங்கியுள்ளார்களாம். சுமார் 2 கோடி மதிப்புள்ள அந்த போட் ஹவுஸை வாங்கி காசு சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.