இலங்கை
2024 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி இன்று (10.12) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 முதல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.