Connect with us

வணிகம்

33 வருட அனுபவம்; ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

Published

on

Sanjay Malgo

Loading

33 வருட அனுபவம்; ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் (டிச.10)  முடிவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்து நேற்று உத்தரவிட்டது. சுமார் 6 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று கூறியிருந்த நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக வருவாய்த் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?1990-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, ராஜஸ்தான் கேடர் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தானில் அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.கான்பூர் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து இவர், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் படித்து முடித்தார்.இந்திய குடிமையியல் பணியில் 33 வருட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா மின், நிதி, வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை புதன்கிழமை பொறுப்பேற்கிறார். வரும் புதன்கிழமை முதல் 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்ற உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன