வணிகம்
Aadhaar Card: ஒரு மொபைல் நம்பருடன் எத்தனை ஆதார் எண்களை இணைக்க முடியும்? முழு விவரம் இதோ!

Aadhaar Card: ஒரு மொபைல் நம்பருடன் எத்தனை ஆதார் எண்களை இணைக்க முடியும்? முழு விவரம் இதோ!
மொபைல் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைத்து வைப்பதன் மூலமாக பாதுகாப்பான OTP அடிப்படையிலான சரிபார்ப்பு வசதியை நாம் பெறலாம். இதன் மூலமாக eKYC, அரசு தொடர்பான மானியங்கள் மற்றும் வங்கி ட்ரான்ஸாக்ஷன்கள் போன்ற ஆன்லைன் சேவைகளை நாம் எளிமையாக பயன்படுத்தலாம். மேலும் அடையாள அட்டை மூலமாக செய்யப்படும் திருட்டுக்கு எதிராக இது ஒரு பாதுகாப்பு அடுக்காக அமைகிறது. கூடுதலாக மொபைல் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா முயற்சிக்கு உதவுகிறது.
ஒரு மொபைல் நம்பருடன் எத்தனை ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனினும் உங்கள் ஆதார் எண்ணை நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பருடன் இணைப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு பரிந்துரை செய்கிறது. இதன் மூலமாக உங்களுடைய ஆதார் எண்ணுக்கு மட்டுமே பல்வேறு OTP அடிப்படையிலான சரிபார்ப்பு சேவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு மொபைல் நம்பருடன் பல்வேறு ஆதார் எண்களை உங்களால் இணைக்க முடியும். இந்த எண்ணிக்கைக்கு அதிகப்பட்ச வரம்பு எதுவும் கிடையாது. பின்வரும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
ஒரே மொபைல் நம்பர் பெரும்பாலும் ஒரு குடும்பத்திற்குள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகமாக காணப்படுகிறது.
பிசினஸ் அல்லது நிறுவனங்கள் ஒரே ஒரு மொபைல் நம்பரை பல்வேறு ஆதார் இணைக்கப்பட்ட சேவைகளுக்கு பயன்படுத்துவது வழக்கம். எனினும் OTP அடிப்படையிலான சரிபார்ப்பு சேவைகளை பெறுவதற்கு ஒரு ஆதார் நம்பர் குறைந்தபட்சம் ஒரு மொபைல் நம்பருடனாவது இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புகள் அல்லது அப்டேட்டுகளுக்கான OTPக்களை பெறுவதற்கு ஆதாருடன் முதன்மை மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆக்டிவாக இருப்பது அவசியம். மொபைல் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைத்தல் ஒருவேளை ஆதார் அட்டையை பெறும்போது உங்களுடைய மொபைல் நம்பரை அதில் பதிவு செய்திருக்காவிட்டால் ஆதார் சேவை மையத்தை அணுகி உடனடியாக உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.
உங்களுடைய மொபைல் நம்பரை நீங்கள் மாற்ற நினைத்தால், அதையும் ஆதார் சேவை மையம் மூலமாகவே செய்யலாம். அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை கண்டுபிடிப்பதற்கு நீங்கள் https://bhuvan-app3.nrsc.gov.in/aadhaar என்ற போர்டலை பார்வையிடலாம்.